<?xml version="1.0" encoding="UTF-8"?><song><lyrics>[V1]
 எப்போது எப்போதுன்னு
 காத்து கிடந்த மனசு
 சத்தியத்தை பித்து புடிச்சு
 தேடுன அந்த உசுரு
 எப்போது கனி கொடுப்பேன்னு
 காத்துக் கிடந்த மனசு
 சத்தியத்தை பித்து பிடிச்சு
 தேடின அந்த உசுரு

[V2]
 நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
 வீணா போகவில்லை
 நான் விதைச்ச விதை எல்லாம்
 தரிசா மாறவில்லை-2

[V3]
 1.சொப்பனங்கள் கண்டவனை
 காசுக்கு விற்றவனை
 ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே
 குடும்பங்கள் சேர்ந்து கொண்டு
 குழியிலே தள்ளினாலும்
 ஊருக்கு முன் முத்தமிட்டு
 அணைத்துக்கொள்பவரே

[V4]
 நீர் செய்தத நெனச்சு
 நன்றி சொல்லுது மனசு
 எத்தனையோ பாட்டிருந்தும்
 மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச

[V5]
 2.திக்கி திக்கி பேசும் என்னை
 மந்த நாவை கொண்டவனை
 இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
 அழைப்பே இல்லை என்று
 அழைத்து சொன்னவர் முன்
 அரியணை கொடுத்து
 என்னை அரசனாக்கினீர்

[V6]
 நீர் மட்டும் இல்லனா
 என்ன நான் செஞ்சிருப்பேன்?
 எத்தனையே பேர நம்பி
 ஏமாந்தும் போயிருப்பேன்!-நான் ஜெபிச்ச</lyrics>
<title>Naan Jebitha Jebam Yeppothu Yeppothunnu</title>
<aka>நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் எப்போது எப்போதுன்னு</aka>
<author>Giftson Durai</author>
</song>